அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என எலான் மஸ்க் பகிர் ட்வீட்.
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதுவும் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்திருந்தார்.
ஆனால், தன முடிவில் இருந்து பின்வாங்கினார் எலான் மஸ்க், ஏனெனில், ட்விட்டரில் 5% போலி கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அவரே தெரிவித்திருந்தார். இதனிடையே, தினமும் ஒரு ட்வீட்டை பதிவிட்டு வரும் எலான் மஸ்க், தற்போது அமெரிக்காவின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
அதாவது, அவரது பதிவில், கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் கருணைக் கட்சியாக இருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் பிரிவினை மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டனர். அதனால் என்னால் இனி அவர்களை ஆதரிக்க முடியாது, குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என தெரிவித்து, இப்போது, எனக்கு எதிரான அவர்களின் மோசமான தந்திரங்கள் வெளி வருவதைப் பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்திருந்தார். தற்போது, டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு தான் என் ஆதரவு என்று உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…