இலங்கையில் எனது தொப்புள் கொடி உறவுகள் இருக்கிறார்கள் !
நடிகர் சதிஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு விரைவில் திருமணம் என்ற தகவல்களும் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சதிஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,அவரது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் இலங்கையை பற்றி பேசிய போது இலங்கை பறந்து விரிந்த தமிழகம்.அங்கு என்னுடைய தொப்புள் கொடி உறவுகள் அதிகம் வசித்து வருகிறார்கள்.
அண்மையில் இலங்கையில் சென்று 4 நாட்கள் தங்கி இருந்தேன். அங்கு நான் பிரபாகரன் ஐயா வாழ்ந்த இடத்திற்கு சென்றேன்.அவர் எவ்வளவு பெரிய மேதை வாழ்ந்த இடம் அது என்று கூறியுள்ளார்.மேலும் அவர் இலங்கை தமிழர்களை மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.