“எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது!”- நடிகர் அஜித் தரப்பில் அறிக்கை
நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதிபெற்ற அதிகாரப்பூர்வ பிரதிநிதி என நடிகர் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தவர், நடிகர் அஜித் குமார். கடந்த சில தினங்களாக இவரின் பெயர் முன்னிறுத்தி, தவறாக பயன்படுத்திவருவதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், தொழில் மற்றும் வர்த்தகரிதியாகவும் தனது பெயரை சிலர் முன்னிறுத்திக் கொள்வதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சுரேஷ் சந்திரா மட்டுமே தனது அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிரதிநிதி எனவும் அஜித்தின் பெயரை பயன்படுத்தி யாரேனும் அணுகினால், சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.