எனது திருமணம் ரகசியமாக நடக்காது.! நடிகை சுனைனா ஆவேச பேச்சு.!

Default Image
  • நடிகை சுனைனா ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின.
  • எனது திருமணம் ரகசியமாக நடக்காது. அனைவரும் முன்னிலையில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என சுனைனா கூறினார்.

நடிகை சுனைனா சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர்  நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் அந்த ஆண் நண்பரை சுனைனா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதற்கு சுனைனா விளக்கம் அளித்துள்ளார். அதில் , “எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. இதனால் என்னை பலர் விசாரித்த வருகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.

எனக்கு திருமணம் நடந்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை. வதந்திதான் யாரும் நம்பவேண்டாம் என கூறினார்.எனது திருமணம் ரகசியமாக நடக்காது. மாப்பிள்ளை முடிவானதும் எல்லோருக்கும் தெரிவித்து அனைவரும்  முன்னிலையில் தான்  திருமணம் செய்து கொள்வேன்” என சுனைனா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்