எனக்கு ரொம்ப நாள் கனவு சினிமாவில் நடிக்கிறது என நடிகை தர்ஷா குப்தா கூறியுள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரூத்ர தாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய தர்ஷா குப்தா ” தர்ஷா குப்தா என்றாலே, குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி தான்.. எனக்கு ரொம்ப நாள் கனவு சினிமாவில் நடிக்கிறது.. அந்த கனவை இயக்குனர் மோகன் ஜி நிறைவேற்றியுள்ளார்.. எனக்கு மேக்கப் இல்லாமல் கிராமத்து பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க நீண்ட நாள் கனவு… எனது முதல் படமே பெரிய குழுவுடன் பண்ணியது மிகவும் பெரிய பெருமாக நினைக்கிறன்..
எல்லா பெரிய பெரிய நடிகர்கள் நடித்துள்ள்ளார்கள்.. எனக்கு மட்டும் தான் முதல் படம்..இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் மோகன் ஜி சாருக்கு நன்றி.. படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கிராமத்து பொன்னாக ஒரு தைரியமான பெண்ணாக நடித்துள்ளேன்… படம் முழுவதும் நான் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.. எனக்கு ஒரு சவாலான கதாபாத்திரம்..இந்த வாய்ப்பை கொடுத்த அனைவர்க்கும் நன்றி.” என கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…