எனது நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கொரோனாவிலிருந்து மீண்ட தமன்னா உருக்கமாக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகம் முழுவதுமே அதிகரித்து தான் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த கொரோனா தொற்றால் தமிழகத்தில் அதிக அளவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள், நடிகர்கள் என முக்கியமானவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் அண்மையில் தமிழ் திரையுலக முன்னணி நடிகை தமன்னா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் உங்களுக்கு எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும், அதிகளவில் நோய்வாய்ப்பட்டு பலவீனமாகவும், பயத்துடனும் இருந்தேன். எனக்கு நான் வசதியாக இருப்பதாக உணர வைத்த உங்களது சிகிச்சையும் உங்களது அன்பும், நேர்மையான அக்கறையும் என்னை குணமாக்கியது. எனவே உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி என அவர் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…