என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது – கன்னிகா சினேகன்.!

Default Image

7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் கடந்த ஜூலை – 29 ஆம் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது 7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ” என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது. முதல் புகைப்படம். வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம். அன்புடன் கன்னிகா சினேகன்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்