எனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

நானும் ,எனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிக்கின்றோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.அமெரிக்க தேர்தலை பொருத்தவரை அங்கு இந்திய வம்சாவளியினரின் வாக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.எனவே ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் வாக்கினை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் இந்தியாவுடனான நட்பு குறித்து கேள்வி எழுப்ப்பினார்கள்.இதற்கு டிரம்ப் பதில் கூறுகையில்,நானும் ,எனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிக்கின்றோம்.இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை நான் அதிகம் நேசிக்கிறேன். நான் எப்போதும் இந்தியாவின் சிறந்த நண்பனாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025