என் மகள் அம்மாவா மாறிட்டா! அறந்தாங்கி நிஷாவின் ஆசை நிறைவேறியது!

என் மகள் அம்மாவா மாறிட்டா.
அறந்தாங்கி நிஷா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலும், நடிப்பாலும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே தனக்கென உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர்க்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பொறந்து 47 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ஸபா எங்க அம்மா மாதிரி இருக்கா, நானும் அதான் ஆசைப்பட்டேன். அவ எங்க அம்மா மாதிரியே தூங்குறாப்பா, 47 நாள்ல எங்க அம்மாவா மாறிட்டா, தாங்ஸ் காட்.’ என பதிவிட்டுள்ளார்.