“என் ரத்தம் சாஸை போல் சுவையாக இருக்கிறது” மிரட்டலான வீடியோவை வெளியிட்ட ‘தி ராக்’.!
மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ‘தி ராக்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்.
இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில் 50 பவுண்ட் எடையை வைத்து உடற்பயிற்சி செய்கையில் அவரது கண்களின் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய அதனை ருசி பார்த்து கொண்டு தனது ரத்தம் சாஸை போல் சுவையாக இருப்பதாக கூறி விட்டு மீண்டும் ஒர்க்கவுட் செய்யும் பணியினை தொடங்குகிறார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ…