இதுதான் வலிமை படத்தில் தல அஜித் ஓட்டிய பைக்.. விலை என்ன தெரியுமா?

Default Image

நடிகர் அஜித் வீலி (wheelie) அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக நிலையில், அவர் வீலி அடித்த அந்த பைக் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

வலிமை அஜித் வீலி:

சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளர், உள்ளிட்டோரை டேக் செய்து, தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வந்தனர். அந்தவகையில் தற்பொழுது நடிகர் அஜீத் வீலி (wheelie) செய்யும் புகைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களை அதனை கொண்டாட ஆரமித்தனர். வீலி என்பது, பைக்கின் முன் பகுதியை தரையில் இருந்து தூக்கி, சிறிது தூரம் செல்வது ஆகும்.

அந்த பைக் குறித்து சமூகவலைத்தளங்களில் அதிகளவில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த பைக்கின் பெயர் என்ன? அதன் விலை எவ்வளவு? என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், அவர் உபயோகித்த பைக்கின் பெயர், எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 (MV Agusta Brutale 800).

எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800:

எம்வி அகுஸ்ட்டா, இத்தாலியை சேர்ந்த பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாகும். அந்நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றுதான், எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800. இந்த வகையான பைக்குகள், இந்திய சந்தையில் கடந்த 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்த பைக், நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், 15.59 லட்ச ரூபாய் என்ற விலை, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அந்த விலையையும் கருத்தில் கொள்ளாத சிலர், அந்த பைக்கை வாங்கி வந்தனர்.

இந்த பைக்கில் 798 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின், 11,500 ஆர்பிஎம்மில் 110 பிஎஸ் பவரையும், 7,600 ஆர்பிஎம்மில் 83 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன்மூலம் சிறந்த பிக்-அப் திறனை கொண்டது. மேலும், 175 கிலோ எடை கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 16.5 லிட்டர் பெரிய பியூல் டேன்க் கபாசிட்டியை கொண்டது. இதனால் லாங் ரைட் செல்பவர்களுக்கு சிறந்த சாய்ஸாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் மைலேச் அதனை களைத்தது.

அந்தவகையில் இந்த பைக், 18 கிலோமீட்டர் கொடுக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14-16 வரை கொடுக்கின்றது. இதன் டாப் ஸ்பீட், 237 to 244 km/h வரை செல்லும் எனவும், பாதுகாப்பு அம்சமாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் வசதியை கொண்டுள்ளது. தற்பொழுது இந்த நிறுவனத்தின் பைக்குகள், இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், தனது பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய மோட்டோராயல் கைனடிக் (MotoRoyale Kinetic) எனும் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது. அந்த கூட்டணி, பிப்ரவரி மாதம் முறிந்த நிலையில், இந்நிறுவனம் தற்காலிகமாக இந்திய சந்தையை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது. வெளியேறியது. இதனால் இந்த பைக்குகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 ரக என்ஜின் மட்டுமே இந்தியாவில் அனுமதிக்கப்படும் நிலையில், எம்வி அகுஸ்ட்டா பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி, இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறது. இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்வதற்கான பார்ட்னர்ஷிப்பை எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் தேடி வருகின்றது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்