மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க….! சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க…..! இறால் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா…..?
பிரியாணி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் இந்த பிரியாணியிலேயே பல வகையான பிரியாணி உள்ளது. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, என பல வகையான பிரியாணிகள் உள்ளது. ஆனால் யாரும் அதிகமாக இறால் பிரியாணி சாப்பிட்டு இருக்க மாட்டோம். இப்பொது இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி – 4 கப்
- இறால் – கால் கிலோ
- வெங்காயம் – 3
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 3
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி தழை – 1 கைபிடி
- உப்பு – தேவைக்கேற்ப
- பட்டை, கிராம்பு, சோம்பு – 2 துண்டுகள்
- பிரிஞ்சி இலை – 2
செய்முறை :
இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, பொரிந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய கலவையுடன் சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கி, 5 நிமிடம் கழித்து பாசுமதி அரிசியை சேர்த்து கிளற வேண்டும். பிறகு 9 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் பிரியாணி ரெடி.