நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா – அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்!

Default Image

நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா முரளிதரன், அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் 800 எனும் தலைப்பில் திரைப்படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பிற்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பான கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், முத்தையா முரளிதரன் இலங்கையில் தமிழர் இனவழிப்பு செய்யப்பட்ட நாள் தனக்கு மகிழ்ச்சிகரமான நாள் என கூறியதால் இவரது வார்த்தைக்கு பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என உலகெங்கிலும் வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வரக் கூடிய நிலையில் விரைவில் இது குறித்து விஜய் சேதுபதி நல்ல கருத்துகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான ராமசாமி என்பவர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், ஒரு நல்ல மனிதன் எனும் இடத்தை விட்டுக் கொடுத்தவர். அதாவது நல்ல மனிதராக தோல்வி அடைந்து விட்டார். அதனால் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிப்பது தமிழர்களை அவமதிப்பதுக்கு சமம் என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலவற்றிலும் வரவேற்பு பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்