முத்தையா முரளிதரன் கோரிக்கை – நன்றி தெரிவித்து விஜய் சேதுபதி ட்வீட்

Default Image

முத்தையா முரளிதரனின் கோரிக்கைக்கு நன்றி, வணக்கம் என விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர் .

இதனிடையே முத்தையா முரளி தரன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.சிலருக்கு என் மேல் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் முத்தையா முரளி தரன் அறிக்கையை மேற்கோள்காட்டி  நடிகர் விஜய் சேதுபதி ,தனது ட்விட்டர் பக்கத்தில் ,நன்றி ..வணக்கம் என பதிவிட்டுள்ளார்.முத்தையா முரளிதரன் கோரிக்கையை ஏற்று  800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman
today rain news
shaam sivakarthikeyan
sunil gavaskar