சர்தாருக்கு பிறகே இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார்.
இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. முத்தையா இயக்கும் படத்தை முடித்த பின் மீண்டும் சர்தார் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, நடிகர் கார்த்தி அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, சர்தார் படத்தில் நடித்துவிட்டு முத்தையா இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. முத்தையா இயக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் எனவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது. ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …