உருமாறிய கொரோனா தொற்று : முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிப்பு…!
கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது முதலில் பரவிய கொரோனாவை விட வேகமாக பரவும் திறன் கொண்டது என கூறப்பட்டது.
கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்று வீரியம் மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 379 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் 800க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.