இஸ்லாமியர்கள் தொழுகைக்கு பள்ளிவாசல் செல்ல வேண்டாம்! எம்.எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள்
கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.
இச்சம்பவத்தில் 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். அதேபோல 500 கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கையில் தொடர் பதட்டம் காரணமாக இஸ்லாமியர்கள் இன்று ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும். பயங்கரவாதிகள் பள்ளி வாசல்களைத் தாக்க அபாயம் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். என அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் கூறியுள்ளார்.