அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் அமைப்பு முடிவு!
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியருக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்றும் இடம் கொடுக்குமாறும் தீர்ப்பு வந்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லாது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று ஆலோசித்து வந்தனர். முஸ்லீம் அமைப்பான பாபர் நடவடிக்கை குழு, சன்னி வகுப்பு வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ராஹ்மனி தலைமையில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.