எலான் மஸ்கின் “நியூரலிங்க்” கணினி சிப்கள், மூன்று சிறிய பன்றிகளின் மூலையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க், மிகவும் வித்தியாசமான நபர். இவர், 2016- ம் ஆண்டில் நிறுவப்பட்ட சான் பிரான்சிஸ்கோ, விரிகுடா பகுதியிலுள்ள நியூரலிங்க் என்ற நிறுவனத்தை நிறுவினார்.
அந்த நிறுவனம் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் முதுகெலும்பு போன்ற நரம்பியல் காயங்களை குணப்படுத்த உதவும் வகையிலான ஆயிரக்கணக்கான மின்முனைகளை உள்ளடக்கிய வயர்லெஸ் மூளை-கணினி சிப்களை பொருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த எலான் மஸ்க்,”இதுபோன்ற கருவிகள், மனிதர்களின் நினைவாற்றல் இழப்பு, காது கேளாமை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற வியாதிகளை தீர்க்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சிகிச்சைக்கான குறிப்பிட்ட தினத்தை மஸ்க் வழங்கவில்லை எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மனித சோதனைகள் தொடங்கும் என்ற முந்தைய அறிக்கைகளிலிருந்து பின்வாங்கவுள்ளதாக தெரிகிறதாக அந்நிறுவனத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மத்தேயு மெக்டகல் கூறினார். மேலும், நிறுவனத்துடன் இணைக்கப்படாத நரம்பியல் விஞ்ஞானிகள், நியூரலிங்க் பெரும் முன்னேற்றம் கொண்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு நீண்ட ஆய்வுகள் தேவை என எச்சரித்துள்ளார்.
நியூரலிங்க் நிறுவனம் சார்பில் எலான் மஸ்க், கடந்த வெள்ளிக்கிழமை இந்த சோதனைக்காக உட்படுத்தப்பட்ட கெர்ட்ரூட், மூளையின் ஒரு பகுதியிலுள்ள நியூரலிங்க் உள்வைப்பு கொண்ட பன்றியை கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார்.
நிறுவனத்தில் தலா இரண்டு சிப் பொருத்தப்பட்ட மூன்று பன்றிகள் இருப்பதாகவும், அதில் ஒரு பன்றியை ஏற்கனவே வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அந்த பன்றி, மலம் மற்றும் வைக்கோலை உண்ணத் தொடங்கியதாகவும், விலங்கின் நரம்பைக் கண்காணிக்கும் வரைபடத்தில் அந்த சிப்கள் தனது வேலையை செய்து வருவதாக தெரிவித்தார்.
ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஒரு சாதாரண பன்றியிலிருந்து பிரிக்கமுடியாதது என மஸ்க் கூறினார். உள்வைப்பு தரவைப் பயன்படுத்தி அதிக துல்லியத்துடன் ஒரு டிரெட்மில் ஓட்டத்தின் போது பன்றியின் மூட்டு அசைவை அந்நிறுவனம் நிறுவனம் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…