உயிரை பணயம் வைத்து கொரோனாவிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியருக்காக இசைஞானி இளையராஜாவின் ‘பாரதபூமி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளத். ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டி பல பாடலாசிரியர்களும், இசை கலைஞர்களும் பாடல்களை வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘பாரதபூமி’ என்று பெயரிடப்பட்ட அந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடலுக்கு லிடியன் பியானோ, கீபோர்டு வாசிக்க எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார். தற்போது இந்த பாடலை இசைஞானி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…