இசைஞானி இளையராஜாவின் திரைப்பயணம்.!

Default Image

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று.

பிறப்பு :-

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரத்தில் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கு பிறந்தவர் தான் ராசய்யா என்னும் இளையராஜா. மேலும் இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்ற சகோதரர்களும், ஜீவா என்ற மனைவியும் உள்ளனர். ஜீவா மற்றும் இளையராஜா தம்பதியருக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரணி என்ற பிள்ளைகள் உள்ளனர். இவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் தற்போது இசையமைப்பாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர்.

கிட்டார் மற்றும் ஹார்மோனியம் வாசிப்பதில் சிறு வயதிலேயே தேர்ச்சி பெற்ற இவர், 1961 முதல் 1968 வரை பல இடங்களுக்கு தனது சகோதரர்களுடன் சென்று பல கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டு பிரபலமானார். அதனையடுத்து தனது 26வது வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்த இவர், பியானோ மற்றும் கிதார் கருவியினை வாசிக்க கற்று கொண்டார். அதன் பின் டிரினிடி என்ற லண்டனில் உள்ள இசைக் கல்லூரியில் கிளாஸிக்கல் கிட்டார் தேர்வில் பங்கேற்று தங்க பதக்கத்தை வென்றார்.

திரைப்படங்கள் :-

அதனையடுத்து அன்னக்கிளி என்ற 1976ல் வெளியான படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் நாட்டுப்புற இசையினை மக்களுக்கு வழங்கினார். அந்த படத்திலுள்ள ‘மச்சானை பார்த்தீங்களா’ பாடல் மிகவும் பிரபலமானது. அதனையடுத்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் இசையமைத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிரபலமானார். இவர் நாட்டுப்புற பாடல்களை மட்டுமில்லாமல் கர்நாடக இசையிலும் பல பாடல்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். இவரை தமிழ் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் ‘மேஸ்ட்ரோ’ என்று அழைப்பார்கள். மேலும் இவர் பல பக்தி பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

இளையராஜா அவர்கள் ஏறக்குறைய ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் செய்துள்ளார்.

விருதுகள் :-

மேலும் இவர் 1993ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்ததன் மூலம் ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதையும் 1988ல் பெற்றார். மேலும் 1995ல் கேரள அரசின் விருதையும், 1994ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்தும், 1996ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்தும் இசையில் சாதனை படைத்ததற்காக டாக்டர் என்னும் முனைவர் பட்டத்தை பெற்றார். மேலும் 2010ல் பத்ம பூசண் மற்றும் 2018ல் பத்ம பூஷன் விருதையும் பெற்ற இவர் இந்திய அரசிலிருந்து 5 முறை தேசிய விருதினை பெற்றுள்ளார். ஆம் 1985ல் தெலுங்கில் வெளியான சாகர சங்கமம் படத்திற்காகவும், 1987ல் தமிழில் வெளியான சிந்து பைரவி படத்திற்காகவும் தேசிய விருது பெற்றார். மேலும் தெலுங்கில் 1989ல் வெளியான ருத்ர வீணை, மலையாள படமான பழசிராஜா மற்றும் தமிழில் தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசை செய்ததற்காகவும் தேசிய விருதினை பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்