கவிஞர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்!
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் (வயது 76) இன்று காலமானார். உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன் காலமானார். தமிழ் திரையுலகில் 1980-களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் கவிஞர் காமகோடியன் எழுதியுள்ளார்.
கடந்த 2002-ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே பாடல் மற்றும் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திருட்டு ரயில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதினார். எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி புகழ்பெற்றார்.
இந்த நிலையில், கவிஞர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். கவிஞர் காமகோடியான் அவர்கள் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு “வரப்பிரசாதம்” திரைப்படத்தில் வேலைசெய்யும் போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப்பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.
அவர் நம்முடைய M.S.V அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய “மனிதனாயிரு* என்ற தனிப்பாடலை M.S.V அண்ணாவும் பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார்.
அன்னார் மறைவு நம் தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் கவிஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…