லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, முடிவடைந்திருப்பதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் ஏப்ரல் 9ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இப்படத்தில் அனிருத் இசையில் ஏற்கெனவே குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 2வது பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்படும் என்று சன்டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…