மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்..! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தி.இமான் அவர்கள், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தி.இமான் அவர்கள், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு இமான் மற்றும் மோனிகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதனையடுத்து, இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்து கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது தான் இமான் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்ல வேண்டும் என்பதால், நானும் மோனிகா ரிச்சர்டும் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து இனி கணவன் மனைவி இருக்கமுடியாது என்று முடிவெடுத்தோம்.
எங்கள் நலம்விரும்பிகள் இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் நாங்கள் இதிலிருந்து முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
— D.IMMAN (@immancomposer) December 29, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025