வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையுமில்லை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் தான். முருகப்பெருமான் கையில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் வேல். அந்த வேல் ஆயுதத்தை பார்வதியம்மன் தனது அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி அசுரனை அழிப்பதற்காக முருகனுக்கு கொடுத்த ஆயுதமே இந்த வேல். நம் வாழ்வில் அனைத்து துன்பங்களையும் போக்கும் வல்லமை கொண்டது வேல். அப்படிப்பட்ட வேலை எப்படி பூஜை செய்து அதன் பலன்களை பெறுவது என்று இப்போது பார்க்கலாம்.
அருகில் உள்ள ஏதேனும் முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று அங்கு பஞ்சலோக வேலை வாங்கி வந்து நமது வீட்டு பூஜை அறையில் சிகப்பு துணி விரித்து, அதன்மேல் செம்பு கிண்ணத்தை வைத்து, அதற்குள் தூய பச்சரிசியை வைத்து அந்த செம்பில் வேலை சொருகி வைக்க வேண்டும். ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வேலிற்க்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர், பால் மற்றும் தூய தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், தூய துணியால் துடைத்துவிட்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி, பன்னீர் ரோஜா பூக்களால் பூஜையை தொடங்க வேண்டும். நைவேத்திய பொருட்களான பொரி, கற்கண்டு, பழம் போன்ற பொருட்களை வைத்து பூஜை தொடங்க வேண்டும். ஊதுவத்தி, தீபாராதனை காண்பித்து கந்தசஷ்டிகவசம் அல்லது முருகன் துதி பாடும் பாடல்களை பாடி பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் பூஜை செய்தால் நமக்கு எண்ணற்ற பாக்கியம் கிடைக்கும். தீராத பிரச்சனைகள் தீரும். திருமண தடைகள் நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீண்டகாலமாக வராமலிருந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். எண்ணற்ற பலன்கள் இந்த பூஜை மூலம் நமக்கு கிடைக்கும்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…