நினைத்த காரியம் நிறைவேற வடிவேலனை வீட்டில் இவ்வாறு பூஜை செய்தலே போதும்!

- அசுரனை அழிப்பதற்காக பார்வதி அம்மன் தனது சக்திகளை பயன்படுத்தி உருவாக்கிய வேலாயுதத்தை முருகனுக்கு கொடுத்திருந்தார்.
- அப்படி சக்திவாய்ந்த வேலை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தாலே நன்மை பல பெருகும்.
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையுமில்லை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் தான். முருகப்பெருமான் கையில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் வேல். அந்த வேல் ஆயுதத்தை பார்வதியம்மன் தனது அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி அசுரனை அழிப்பதற்காக முருகனுக்கு கொடுத்த ஆயுதமே இந்த வேல். நம் வாழ்வில் அனைத்து துன்பங்களையும் போக்கும் வல்லமை கொண்டது வேல். அப்படிப்பட்ட வேலை எப்படி பூஜை செய்து அதன் பலன்களை பெறுவது என்று இப்போது பார்க்கலாம்.
அருகில் உள்ள ஏதேனும் முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று அங்கு பஞ்சலோக வேலை வாங்கி வந்து நமது வீட்டு பூஜை அறையில் சிகப்பு துணி விரித்து, அதன்மேல் செம்பு கிண்ணத்தை வைத்து, அதற்குள் தூய பச்சரிசியை வைத்து அந்த செம்பில் வேலை சொருகி வைக்க வேண்டும். ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வேலிற்க்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர், பால் மற்றும் தூய தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், தூய துணியால் துடைத்துவிட்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி, பன்னீர் ரோஜா பூக்களால் பூஜையை தொடங்க வேண்டும். நைவேத்திய பொருட்களான பொரி, கற்கண்டு, பழம் போன்ற பொருட்களை வைத்து பூஜை தொடங்க வேண்டும். ஊதுவத்தி, தீபாராதனை காண்பித்து கந்தசஷ்டிகவசம் அல்லது முருகன் துதி பாடும் பாடல்களை பாடி பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் பூஜை செய்தால் நமக்கு எண்ணற்ற பாக்கியம் கிடைக்கும். தீராத பிரச்சனைகள் தீரும். திருமண தடைகள் நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீண்டகாலமாக வராமலிருந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். எண்ணற்ற பலன்கள் இந்த பூஜை மூலம் நமக்கு கிடைக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025