இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் ரஷீதாவின் இறப்பை உறுதி செய்கின்ற வகையில் மருத்துவமனையின் சார்பில் ஒரு இறப்புச் சான்றிதழும் ரஷீதாவின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் இறுதி சடங்கிற்கான வேலைகளில் ஈடுப்பட்ட உறவினர்கள் அவர்களின் வழக்கப்படி குளிக்க வைக்கும் நிகழ்வின் போது அவருடைய மூட்டுகளில் அசைவு இருப்பதை அவருடைய மருமகள் கண்டறிந்து அதிர்ச்சி ஆகினர் நிலையை உணர்ந்து சற்றும் தாமதிக்காத அவர் ரஷீதா முன்னால் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் இந்த நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் அங்கு சற்று பதற்றம் கலந்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் ஒரு உடலில் உயிர் இருக்கிறதா.?அல்லது இல்லையா என்று ஆராயத்தவறிய மருத்துவமனையை பொதுமக்கள் கண்டித்தும் வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…