நம்முடைய முன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி?!

Published by
மணிகண்டன்
  • எல்லாம் நன்றாக இருந்தும் ஏதோ ஒன்று நம் முன்னேற்றத்தை தடுத்து கொண்டே இருக்கும்.
  • அப்படி தடுத்து கொண்டிருக்குமானால் அது நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் பிரதிபலனாக கூட இருக்கலாம்.

நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாக செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை கணக்கிட்டு இந்த ஜென்மத்தில் அதற்கான பலன் அல்லது தண்டனை, சிறு குறைகள் நம்மில் பலருக்கும் நிகந்து இருக்கும்.

அதனை நிவர்த்தி செய்ய பல வழிகள் உள்ளன. அதாவது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கும் வல்லமை நமது குல தெய்வத்திற்கு உண்டு. அந்த குலதெய்வ வழிபாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும். நம்முடைய குல தெய்வம் எந்த தெய்வம், நம் முன்னோர்கள் எந்த குல தெய்வத்தை வழங்கினார்கள் என கண்டறிந்து குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

அடுத்ததாக நம் முன்னோர்கள் வழிபாடு. முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து விடவேண்டும். அவர்களுக்காக அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். எள், தண்ணீர் வைத்து முன்னோர்களின் ஆசியை பெற்று கொள்ள வேண்டும். பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்தி கீரை போன்றவற்றை கொடுக்கலாம். காகத்திற்கு தினமும் மதிய உணவு படைக்க வேண்டும். இது நமது முன் ஜென்ம வினையை  குறைக்க கூடிய பரிகாரங்களில் ஒன்று.

ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து அதன்மீது உப்பை வைத்து பின்னர் உதிரி பூக்களை அதன் போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள். இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளில் இருந்து நமக்கு மோட்சம் கிட்டும்.

நாம் கோவிலுக்கு செல்லும் போது சண்டிகேஸ்வரரை கண்டிப்பாக வணங்க வேண்டும். நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டவர் சண்டிகேஸ்வரர். அவரை வேண்டி கொண்டு அன்னதானம் செய்யலாம். அது நமது முன்ஜென்ம பாவங்களை போக்க வல்லது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

56 mins ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

12 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

17 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

17 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

17 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

18 hours ago