மும்பையில் போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி.!
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றதால் ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மும்பையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி மும்பை பாந்த்ராவில் போராட்டம் நடத்தி வந்தனர். ஊரடங்கு காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை எனக்கூறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில், திடீரென 2000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கூடியதால், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். பின்னர், போராடிய தொழிலார்கள் கூட்டம் கலைக்கப்பட்டது.