மும்பை கிரிக்கெட் வீரர் சரமாரியாக குத்தி கொலை

மும்பை பாண்டூப் பகுதியை சார்ந்த ராகேஷ் பன்வர் உள்ளூர் கிரிக்கெட் வீரரான இவர் தற்போது சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து பயிற்சியாளராக உள்ளார். இந் நிலையில் நேற்று இரவு தனது தோழி உடன் பாண்டூப் பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு திடீர்ரென வந்த மூன்று பேர் சேர்ந்த மர்ம கும்பல் ராகேஷ் பன்வரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் ராகேஷ் பன்வர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
ராகேஷ் பன்வரின் நண்பன் கூறுகையில்,ராகேஷ் வசிக்கும் பகுதியில் உள்ள கான் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகவும்,அதனால் அவர்கள் கொலை செய்து இருக்கலாம் என கூறியுள்ளார்.ராகேஷ் பன்வரின் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025