மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகியும்,ஐந்து முறை கிராமி விருது வென்றவருமான நவோமி ஜட்,தனது 76 வயதில் சனிக்கிழமை காலமானார்.இதனையடுத்து,நவோமி ஜட்டின் மரணம் தொடர்பாக அவரது மகள்கள்,வைனோனா மற்றும் ஆஷ்லே,தி அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு வழங்கிய அறிக்கையில் கூறியதாவது:
“இன்று நாங்கள் ஒரு பெரும் சோகத்தை அனுபவித்தோம்.எங்கள் அழகான தாயை இழந்தோம்.இதனால் நாங்கள் உடைந்து போனோம். நாங்கள் ஆழ்ந்த துக்கத்தில் பயணிக்கிறோம்,நாங்கள் எங்கள் தாயை நேசித்ததைப் போலவே,அவர் பொதுமக்களாளும் நேசிக்கப்படுகிறார் என்பதை அறிவோம்”,என்று தெரிவித்துள்ளனர்.
மேலும்,அவரது கணவர் மற்றும் சக பாடகர் லாரி ஸ்டிக்லான்ட் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,நவோமி மரணம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்றும்,குடும்பம் துக்கப்படுவதால் தனியுரிமை கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், அவர் தனது மகள் வைனோனாவுடன் தி ஜூட்ஸின் உறுப்பினராக கன்ட்ரி மியூசிக் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட நிலையில்,மனச்சோர்வு, பதட்டம்,எடிமா, வழுக்கை, நடுக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…