யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில், முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019-இல் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு திடீரென்று நினைவு ஸ்தூபி இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தமிழர்கள் பகுதியில் போராட்டம் வெடித்த நிலையில், நினைவு ஸ்தூபியை மீண்டும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து ஜனவரி 11-ஆம் தேதி அதே இடத்தில் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…