முளைக்கீரையின் முக்கிய பயன்கள்…!!!
கீரைகள் நம் வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரவல்லது. முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. தற்போது முளைக்கீரையின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
- மலசிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையை பயன்படுத்தினால் அதிலிருந்து விடுபடலாம்.
- பசியை தூண்டக்கூடியது.
- கண்ணுக்கு குளிர்ச்சியை தருகிறது.
- சொறி, சிரங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன.
- உடல் வெப்பத்தை தணிக்கிறது.
- இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
- காசநோயிலிருந்து விடுதலை தருகிறது.
- உடலுக்கு அழகையும், மெருகையும் ஊட்டுகிறது.