சீனாவை சேர்ந்த ஜாங் ஷான்ஷனின் சொத்துமதிப்பு சரிவை கண்டுள்ள நிலையில், பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
புளூம்பெர்க் பணக்காரர் பட்டியலில், ஆசியாவில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி, சீனாவில், பாட்டில் குடிநீர் வணிகத்தில் உச்சத்தில் உள்ள ஜாங் ஷான்ஷன் என்பவர் முதல் இடத்தை பிடித்தார்.
தற்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 5.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம் சீனாவை சேர்ந்த ஜாங் ஷான்ஷனின் சொத்துமதிப்பு 5.59 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரம் இவரது வணிகம் 20% இழப்பை சந்தித்ததால் இவரது சொத்து மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. இதனையடுத்து, தற்போது பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…