உலக பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டை விட 6 இடங்கள் உயர்ந்து சாதனை !!!

Default Image
  • தற்போது முகேஷ் அம்பானி சுமார் சொத்து மதிப்பு ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
  • 106 இந்திய பணக்காரர்களில்முகேஷ் அம்பானி  முதலிடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் இதழ் ஆண்டு தோறும் உலகப் பணக்காரர்களின்  பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னெறி உள்ளார்.
பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபேட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் தொடர்ந்து  அமேசானின் நிறுவனர் பெசோஸ் உள்ளார்.
இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் 2018-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்தது.
தற்போது முகேஷ் அம்பானி சுமார் சொத்து மதிப்பு ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.இதன் மூலம் 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்திற்க்கு முன்னேறி உள்ளார்.
106 இந்திய பணக்காரர்களில்முகேஷ் அம்பானி  முதலிடம் பிடித்துள்ளார்.மேலும் முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்