முடிஉதிர்வுக்கு முடிவுக்கட்டும் செம்பருத்தி பூ…!!!
பெண்களின் மிகப் பெரிய பிரச்சனையே முடி உதிர்வு தான். இதற்கு தீர்வு காண பலர் முயன்றாலும், பல முயற்சிகளை எடுத்தாலும் இதற்க்கு முடிவு கிடைக்கவில்லை. முடி உதிர்வை நினைத்து வேதனைப்பட்டே பலரின் பாதி வாழ்க்கை முடிந்துவிட்டது.
முடி உதிர்வை செம்பருத்தி பூ தடுக்கிறது. இதனை எவ்வாறு செய்து பூச வேண்டும் எனபதை பாப்போம்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தேங்காய் என்னை ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.