எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது பன்முக திறமையால் பல விருதுகளை குவித்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வயது முதிர்வு பிரச்னை காரணமாக காலமானார்.
இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் 3 மகள்கள் ஆவர். இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன், 20 ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை பார்த்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக தான் இந்தியாவுக்குத் திரும்பினார்.
இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…