ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #IndiaWithDhoni ஹேஷ்டேக்!..!ஐசிசியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Default Image

உலககோப்பையில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை சமூக வலைத்தளங்களில்  வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது.தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை    குவித்து வருகின்றனர்.Image
இந்நிலையில் தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கோரிக்கை வைத்தது.இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பிசிசிஐ  தோனி பயன்படுத்திய கையுறைகளில் இருக்கும் முத்திரை மதம் மற்றும் அரசியலை குறிப்பது அல்ல என்பதால்  வரும் போட்டிகளில் அவர் ராணுவ முத்திரை பதித்த கையுறைகளை பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்று  ஐசிசிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
Image
இந்த கையுறை சர்ச்சையானது மேலும் தோனியின் கையுறை தொடர்பாக   பாகிஸ்தான் அமைச்சர் ஃபவட் சௌத்ரி தனது ட்விட்டரில்  ஒரு பதிவை பதிவிட்டு கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். அதில் “தோனி கிரிக்கெட் விளையாடத்தானே போயிருக்காரு மஹாபாரதம் போருக்கு ஒன்றும் போகல என்று விமர்சித்ததோடு   தேவையில்லாத விவாதங்களை எல்லாம் இந்த இந்திய மீடியா செய்து வருகிறது என்று  குற்றம் சாட்டினார்.
Image
இந்நிலையில்  சமூக வலைதளங்களில் தோனிக்கு ஆதரவாக, இந்திய அளவிளான ட்ரெண்டிங்கில்  #IndiaWithDhoni  என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. 
அதில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சில பதிவுகளை போட்டு ஐசிசிக்கு கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர்.


 


https://twitter.com/manishsharmaa02/status/1137049000392024064


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்