இதோ அமெரிக்காவின் பேச்சு புயல்!இந்திய அரசியல்வாதிகளுக்கு சவால்விடும் அளவுக்கு பேசிய எம்.பி….
ஜனநாயகக் கட்சி எம்.பி.யான நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், 8 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பேசி சாதனை படைத்துள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் முன்னாள் தலைவரும், பிரதிநிதிகள் சபையின் தற்போதைய ஜனநாயகக் கட்சி தலைவருமான நான்சி பெலோசி, 77 வயது நிரம்பியவர். புதன்கிழமை காலை 10 மணியளவில் பேசத் தொடங்கி, மாலை 6.11 மணிக்கு முடித்துள்ளார். முறையான ஆவணங்கள் இன்றி மிகச்சிறு வயதில் குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி நான்சி பெலோசி, இந்த நீண்ட உரையை ஆற்றியுள்ளார். இதற்கு முன்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 1909ஆம் ஆண்டு சாம்ப் கிளார்க் என்ற எம்.பி., தொடர்ச்சியாக 5 மணி நேரம் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். அதன் பிறகு 108 ஆண்டுகள் கழித்து மிக நீண்ட உரையாற்றியவர் என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.