நாட்டிலேயே நான் தான் பணக்கார எம்.பி.!போட்டி போட்டு உண்மையை கூறும் எம்.பி.க்கள் …
4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு என நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக ஐக்கிய ஜனதாதள எம்.பி.யான மகேந்திர பிரசாத் தனது சொத்து மதிப்பை அறிவித்துள்ளார். கிங் மகேந்திரா என்று அழைக்கப்படும் மகேந்திரப் பிரசாத், 1985 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பீஹார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள இவர், பிரமாணப்பத்திரத்தில் தமது சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 10 கோடியே 21 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தக்காரரான மகேந்திர பிரசாத் எஸ்.பி.ஐ. வங்கியில் 2 ஆயிரத்து 239 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வைத்துள்ளார். 211 வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், பிரிட்டனுக்கு 53 முறையும் அமெரிக்காவுக்கு 10 முறையும் சென்றுள்ளதாகவும் இவர் கூறியுள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள்ள ஜெயாபச்சன் தான் பணக்கார எம்.பி. என்று கூறப்பட்ட நிலையில் மகேந்திர பிரசாத் தனது சொத்து ஆயிரத்து 10 கோடியே 21 லட்சம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.