பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்கள்..!
வருகின்ற 5 ஆம் தேதி ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம், யோகி பாபுவின் ட்ரிப் மற்றும் சக்தி சிவன் இயக்கி நடித்த ஆட்கள் தேவை ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. இதில் சில திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று நல்ல சாதனைகளையும் படைத்தது. அதனையடுத்து சமீபத்தில் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து முதல் படமாக விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரிலீஸானது .ஆனால் எதிர்பார்த்ததை விட வசூலில் மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், தற்பொழுது 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பல முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் வெளியிட முன் வந்துள்ளனர் . அந்த வகையில் இந்த மாதம் வருகின்ற 5 ஆம் தேதி மூன்று தமிழ் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.அதாவது ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம், யோகி பாபுவின் ட்ரிப் மற்றும் சக்தி சிவன் இயக்கி நடித்த ஆட்கள் தேவை ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளது.