கொரோனாவை கொள்ளும் மவுத் வாஷ்.. ஆய்வில் வெளியான தகவல்!

Default Image

மவுத் வாஷ் உபயோகிப்பதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த சமூக இடைவேளை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலக நாடுகள் தீவீரமாக இறங்கியுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்கா, பென்சல்வேனியா மாகாணத்தில் உள்ள மருத்துவ வைராலஜி பத்திரிக்கை நிர்வாகம், மவுத் வாஷ் உபயோகிப்பதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் கிரேக் பேயர்ஸ் ஆய்வுகளை மேற்கொண்டார். அவரின் ஆய்வு முடிவுகள் குறித்து பல தகவல்களை பகிர்ந்தார்.

அதில் அவர், கொரோனா தொற்று இருக்கும் நபர், மவுத் வாஷ் பயன்படுத்தினால் வாயில் இருக்கும் வைரஸ் அழிந்துவிடுவதாகவும், கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவாக மீண்டுவர முடியும் என கூறினார். மவுத் வாஷ் மட்டுமின்றி, தனது ஆராய்ச்சியில் பேபி ஷாம்பு, வாய்ப்புண் வாஷ்கள் போன்றவற்றை பலமுறை ஆய்வு செய்தபோது 30 வினாடிகளில் 99.9 சதவீத கிருமிகளை கொன்றுவிடுவதாக கூறினார்.

எனவே கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க, தினமும் மவுத் வாஷ் மூலம் வாய்களை கொப்பளிக்க அவர் அறிவுறுத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்