இன்று தாய்மையை போற்றும் “அன்னையர் தினம்” ! தாய்க்கு வாழ்த்து சொல்லுங்க நண்பர்களே !
இன்று (மே 10) தாய்மையை போற்றும் அன்னையர் தினமாகும். தங்களது தாய்க்கு வாழ்த்து சொல்லுங்கள் நண்பர்களே.
ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.நம்மை பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு பெருமை சேர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாகும். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, முனைப்போடு பாதுகாக்கும் திறமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
அன்னையர் தினத்தின் வரலாறு :-
இந்த சிறப்புமிக்க தினத்தை அமெரிக்கா மாகாணத்தில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் அன்னா ஜார்விஸ் என்பவர் அறிவித்தார். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. சமூக நலனில் அக்கறை கொண்ட இவர் ஆண்டுதோறும் ஒரு தினத்தை எல்லோரும் தங்களது தாயை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக இவர் அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இவரின் கடுமையான உழைப்பே அன்னையர் தினம் கொண்டாட முக்கிய காரணம்.
அன்னையை போற்று வாசகங்கள்:-
1. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” – என்று திருவள்ளுவர் தாய்யை சிறப்பித்துள்ளார்.
2. “தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை” – புதுமொழி
3. “பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு”
4. ” அம்மா என்றழைக்காத உயிரில்லையே”
இவ்வளவு சிறப்பு கொண்ட தாய்க்கு கொண்டாடப்படும் நாள் தான் இன்று “அன்னையர் தினர்”……எனவே நாம் அனைவரும் இன்று ஒரு நாளாவது தங்களது தாயை சந்தோஷம் படுத்தும் விதமாக இருக்க வேண்டும். தாய்க்கு பிடித்தவற்றை செய்தும் பரிசுகள் கொடுத்தும் இதுவரை இல்லாத அளவில் மகிழ்விக்க வேண்டும்.