6 வயது சிறுமியை கொன்ற குற்றவாளியை சந்திக்க விரும்பும் சிறுமியின் தாய் !! கலங்க வைக்கும் காரணம் !!!!

Default Image
  • காட்டுப்பகுதியில் அலிசா கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார்.
  • ஆரோன் காம்ப்பெல் என்ற 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
  • அலிசா தாய் ஆரோனை பார்த்து “என் மகளை ஏன் கொலை செய்தாய் ,எப்படி கொலை செய்தாய் ” என்று கேட்க வேண்டும்

பிரிட்டிஷை சார்ந்த அலிசா என்ற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை 2 தேதி தன்னுடைய தந்தை, பாட்டி ,தாத்தா உடன் என்ற lsle of bute தீவில் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர்.

அப்போது அலிசா திடீரென காணவில்லை அலிசாவை அவரது குடும்பத்தினர்கள் அனைத்து இடத்திலும் தேடியும் அலிசா கிடைக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் அலிசா கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார்.

பின்பு  அலிசா உடலை கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . பரிசோதனையில் அலிசா கழுத்து நெரிக்கப்பட்டு,துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை சம்பந்தமாக ஆரோன் காம்ப்பெல் என்ற 16 வயது சிறுவனை கைது செய்தனர். அங்கு 18 வயது உட்பட்டவரின் புகைப்படங்களை வெளியிடுவது தடை செய்யபட்டு இருந்தாலும் பல மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரோன் புகைப்படத்தை வெளியிட்டனர்.

அலிசாவிற்கும் ,ஆரோனுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை இதனால் முதலில் போலீசாரும் , அலிசா குடுப்பத்தினரும் குழம்பினர். அதற்கு ஏற்றவாறு ஆரோனும் தான் கொலை செய்யவில்லை என கூறினான். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆரோன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

இந்நிலையில் அலிசாவின் தாய் ஜோர்ஜினா லோகிரான் சமீபத்தில் பேட்டியளித்து உள்ளார். அப்போது அவர் கூறுகையில் அலிசா தூங்கும் போது எழுந்து விட்டால் அழ ஆரம்பித்துவிடுவாள், மேலும் அவள் அறைக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் சென்றால் கத்தி விடுவாள்.

அப்படி இல்லையன்றால் அறையில் மறைந்துகொள்வாள், இல்லையன்றால் அறையை விட்டு வெளியே வந்துவிடுவாள் இப்படி இருக்கையில் ஆரோன் சத்தமில்லாமல் எப்படி அலிசாவை வெளியே அழைத்து சென்றியிருக்க முடியும் கண்டிப்பாக கொலை செய்து தான் அவன் அலிசாவை வெளியே கொண்டு சென்றியிருக்க வேண்டும்.

இந்நிலையில் அலிசா தாய் ஆரோனை பார்த்து “என் மகளை ஏன் கொலை செய்தாய் ,எப்படி கொலை செய்தாய் ” என்று கேட்க வேண்டும் எனவும் மேலும்  தன் கண்களை பார்த்து அவன் பதியளிக்க வேண்டும் என கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்