Mothers day – அம்மான்னா சும்மா இல்லைடா!
வாழும் தெய்வங்களுக்காக ஆண்டு தோறும் கொண்டாடப்படும் அன்னையர் தினம் இன்று.
ஆண்டு தோறும் மே மாதத்தின் இரண்டாம் வார ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகின்ற அன்னையர் தினம், இந்த வருடம் மே 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என முன்னோர்கள் கூட அம்மாவுக்கு பிறகு தான் தெய்வத்தையே வைத்துள்ளனர். அதற்க்கு காரணம் தாயின்றி அமையாது உயிர் என்பது தான்.
ஆயிரம் உறவுகள் பட்டாளம் போல இருப்பினும், அங்கு அம்மா எனும் உறவு இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை. இந்த கொரோனா காலகட்டத்திலும் அனைவரும் வீட்டிலிருந்து கவனித்திருப்போம்.
அனைவரும் வீட்டில் முழு ஓய்வில் இருக்கும் போது, அம்மா மட்டும் தான் வீட்டு வேலைகள் சமையல்கள், துணி துவைப்பது என அனைத்தையும் தனியாக நாள் முழுவதும் ஓய்வில்லாமல் செய்து வந்தார்.
நமக்கு பல உறவுகள் இருந்தாலும், அம்மா மட்டுமே நமக்கு ஆபத்து என்றாலும் சந்தோஷமான விஷயம் என்றாலும் வருவார். எனவே தாய்மையை போற்றுவோம். தாயின் முதிர்வில் அவர் நமக்கு செய்ததை நாம் அவருக்கு திரும்ப செய்து மகிழ்விப்போம். அனைத்து உயிர் கொடுத்த தெய்வங்களுக்கும் “அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்”.