கொரோனாவால் கோமா நிலையிலேயே குழந்தை பெற்ற தாய் – 3 மாதங்களுக்குப் பின்பு குழந்தையை பார்த்து தாய் நெகிழ்ச்சி!

Default Image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கோமாவில் இருக்கும் பொழுதே குழந்தையை பெற்று தற்போது மூன்று மாதங்களுக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தனது குழந்தையை அள்ளி அணைக்கும் காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் பகுதியை சேர்ந்த கெல்சி எனும் நிறைமாத கர்ப்பிணியான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் பாதிப்படைந்ததால் கோமா நிலைக்கு சென்று உள்ளார். அதன்பின் மேடிசன் நகரிலுள்ள எஸ்எஸ்எம் ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் கொரோனா தொற்று, கோமா என பல்வேறு சிக்கலான சூழ்நிலையலும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிர்காப்பு கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பும் அதிக அளவில் இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது பழைய நிலைக்கு மாறி மீண்டும் கெல்சி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பின்பு தான் பெற்ற குழந்தை தான் என சுயநினைவுடன் தனது குழந்தையை பார்க்கும் கெல்சி மிகுந்த கண்ணீருடன் குழந்தையை கட்டியணைத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதுடன் பலருக்கும் நெகிழ்ச்சியான தருணத்தையும் உருவாக்குகிறது. இது குறித்து அந்த பெண்மணி கூறுகையில், என்னை மிகுந்த புன்சிரிப்புடன் எனது மகள் வரவேற்றாள் எனவும் அது தனக்கு மகிழ்ச்சியாக இருந்தது எனவும் அவர் கூறியதுடன், தனக்கு மருத்துவம் அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற பெண்மணி குழந்தை பெற்றுள்ளது இதுதான் தங்களது மருத்துவமனையில் முதல் முறை எனவும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்