நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது மகனை பார்ப்பதற்கு 2,700 கி.மீ பயணம் மேற்கொண்ட தாயார்!

Published by
லீனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனால், ஏப்ரல் 14-ம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து வசதிகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பேருந்து என எந்த சேவையும் செயல்படவில்லை. இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து, நோய்வாய்ப்பட்டு கிடக்கும் தனது மகனை பார்ப்பதற்காக, 6 மாநிலங்களை கடந்து, 2,700 கிலோ மீட்டர் தூரம் அவரது தாய் பயணித்துள்ளார்.
இந்த பயணத்தை அவர் காரிலேயே கலந்து சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது இவருடன் இவரது மருமகள் மற்றும் மற்றுமொரு உறவினரும் இருந்துள்ளார். இவர்களுடன் இணைந்து மூன்று நாட்கள் பயணித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய ஷீலாம்மா வாசன், நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாக கூறியுள்ளார். இவரது மகன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.
இவர் பிப்ரவரி மாத விடுப்பில் கிராமத்திற்கு வந்த இவர் ஊரை விட்டு சென்ற சில நாட்களுக்கு பிறகு தனது தாயையும் மனைவியையும் சந்திக்க  வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் , கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
அருண்குமார் நிலை குறித்து ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில்,  பணியாற்றும் கேரளா மருத்துவர் ஒருவர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகம் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக ராஜஸ்தானை நோக்கி காரில் பயணிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இவர்கள், மத்திய அமைச்சர் வி.முரளிதரன், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உம்மன் சாண்டி ஆகியோரின் உதவியுடன், மாநிலங்களை தாண்டி பயணம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

33 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago