4 நாட்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிய தாய்…பசியால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..!
ரஷ்யாவில் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்ததால் பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
ரஷ்யாவில் 25 வயதுடைய வோல்கா பஜிராவோ என்ற பெண், கணவரிடமிருந்து பிரிந்து தன் 2 குழந்தைகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார். வோல்கா நண்பர்களுடன் மதுபான விருந்தை அனுபவிக்க 4 நாட்கள் குழந்தைகளை பட்டினியாக்கியுள்ளார். இவருக்கு 11 மாத செவாலி என்ற மகனும், 3 வயது மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் வீட்டில் வைத்து பூட்டி சிறையிட்டுள்ளார்.
விருந்தை முடித்து திரும்பிய வோல்கா, வீட்டில் இருந்த தொட்டிலில் பட்டினியால் 11 மாத குழந்தை இறந்ததை பார்த்துள்ளார். 3 வயது மகளும் பசியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை பார்த்து மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரஷ்ய நீதிமன்றத்தில் வோல்கா தனக்கு குழந்தைகளை கொல்லும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், ரஷ்ய நீதிமன்றம் குழந்தையை கொன்றதற்காகவும், தாயின் கடமையை செய்ய தவறியதற்கும் வோல்காவை குற்றவாளி என்று தீர்ப்பளித்து வோல்காவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.