பிரித்தானியாவின் தலை நகரமான லண்டனை சேர்ந்தவர் லாரன் வால் ஆவார்.தற்போது 34 வயதான இவர் 19 வயது இருக்கும் போது பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பால் ஒயிட் விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.லாரனுக்கு தந்தை இல்லாதன் காரணமாக இவரின் திருமணத்தை தாய் ஜூலி 15,000 பவுண்ட் செலவு செய்து திருமணத்தை நடத்தியுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு லாரனும் அவரது கணவர் பால் ஒயிட்டும் தேனிலவிற்காக தேவோன் பகுதிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.ஆனால் வீட்டில் தனது தாய் மட்டும் தனியாக இருப்பார் என்று எண்ணிய லாரன் அவரையும் அழைத்துள்ளார்.
முதலில் வர மறுத்துள்ள அவரின் தாயார் ஜூலி பின்னர் வர ஒத்துக்கொண்டுள்ளார்.தேனிலவு சென்ற இடத்தில் தனது அம்மாவும் கணவரும் பேசிக்கொள்வதை பார்த்த லாரன் இந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டதுடன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் தேனிலவு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் லாரனின் சகோதரி அவரின் தாயார் ஜூலியின் மொபைல் போனை எடுத்து பார்த்துள்ளார்.அதில் ஜூலி பாலுடன் ஆபாசமாக பேசிய உரையாடலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் லாரானிடம் கூறியுள்ளார்.லாரன் அவரது கணவர் பாலிடம் இது குறித்து கேட்டுள்ளார்.ஆனால் பால் எந்த ஒரு சரியான பதிலும் கூறாமல் மோதிரத்தை கழற்றி எறிந்துவிட்டு மாமியாரான ஜூலி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஜூலி 9 மாதங்கள் கழித்து குழந்தை பேற்றெடுக்க இருவரும் தமக்கு துரோகம் செய்து விட்டதாக 5 வருடங்கள் கழித்து லாரன் இணையத்தில் தெரிவித்துள்ளார். ஜூலி லாரனுக்கு போன் செய்து எனக்கு கல்யாணம் வந்துவிடு என்று கூறியுள்ளார்.
பாலுக்கும் லாரனுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.ஆனால் 2009-ம் ஆண்டு பாலும் ஜூலியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.லாரன் அவரது மகளின் எதிர்காலத்தை எண்ணி அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
நான் தப்பு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று ஜூலி லாரனிடம் பல முறை கூறியுள்ளார்.ஆனால் லாரன் அதை ஏற்க மறுத்துள்ளார்.ஆனால் பால் அவரிடம் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்கவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் வாழ்க்கை துணையாக வேறொருவரை நாடியுள்ளதாவும் இப்பதான் அவர் கொஞ்சம் மகிச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.இருந்தாலும் இந்த வேதனையை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…