2020-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்.! சூர்யாவின் சூரரை போற்று எத்தனையாவது இடம் தெரியுமா .?

Default Image

2020-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் 2வது இடத்தை பிடித்துள்ளது .

2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல படங்கள் ஓடிடியிலே ரிலீஸ் செய்யப்பட்டது . வீட்டிலிருந்து பலர் ஓடிடி தளத்திலே படங்களை கண்டு ரசித்தனர் .அந்த வகையில் இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்ட் வந்துள்ளது அதன் படி முதலிடத்தை மறைந்த சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பிடித்துள்ளது .அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் பிடித்துள்ளது . மீதமுள்ள 8 இடங்களையும் இந்தி படங்களே பிடித்துள்ளது.இந்த லிஸ்டில் சூரரை போற்று திரைப்படம் மட்டுமே தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்த இடத்தை ஓம் ராவத் இயக்கிய தன்ஹாஜி திரைப்படமும் ,நான்காவது இடத்தை வித்யாபாலன் நடித்த சகுந்தலா தேவி திரைப்படமும் ,ஐந்தாவது இடத்தை ஜான்வி கபூர் நடித்த கஞ்சன் சச்சேனா திரைப்படமும் பிடித்துள்ளது .அதனை தொடர்ந்துள்ள ஐந்து இடங்களை காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமிபாம் ,ஆலியா பட்டின் சடக்2,வேட்டை படத்தின் இந்தி ரீமேக்கான கான் பாகி 3,கிறிஸ்ஹெம்ஸ்வொர்த் நடித்த Extraction மற்றும் அமிதாப் பச்சனின் குலாபோ சித்தபோ ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்